March 2, 2026
பாரதிய ஜனதா கட்சியில் இணையும் 500 க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர்.

பாரதிய ஜனதா கட்சியில் இணையும் 500 க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர்.

திண்டுக்கல் பாரதிய ஜனதா அலுவலகத்தில் மற்ற கட்சியிலிருந்து பாரதிய ஜனதா கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வு மாவட்டத் தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் இந்நிகழ்வில் கலந்து கொண்டு நிருபர்களுக்கு கூறியதாவது.

பெருமாள் கோயில் பட்டியில் 22 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பொது பாதை பிரச்சனையை விரைவில் அரசு அதிகாரிகள் உயர் காவல் அதிகாரிகள் கருத்தில் கொண்டு நல்ல முடிவு எட்டப்பட வேண்டும் என்று கூறினார்.

கூட்டணி கட்சி மட்டும் தான். ஆட்சியில் பங்கு இல்லை என்று எடப்பாடி கூறியிருந்தார் இது குறித்து உங்கள் கருத்து என்ற நிருபர்கள் கேட்ட கேள்விக்கு வெற்றிக்குப் பிறகு முதலமைச்சர் எடப்பாடி தான் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை மற்றது குறித்து தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்று கூறினார்.

அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி என்று அறிவித்த பிறகு திமுக கட்சி கூட்டணி அமைச்சர்கள் யாரும் 200 சீட் வெற்றி பெறுவோம் என்று கூறுவதை நிறுத்திக் கொண்டனர். ஆகவே இதன் மூலமாகவே நாங்கள் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது என்று கூறினார். பின்பு சீமான் ,விஜய் கூட்டணிக்கு வந்தால் வரவேற்கிறோம் பொதுமக்கள் அனைவரும் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கு தயாராகிவிட்டனர் என்று கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *