
சோழவந்தானில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு நாள் அனுசரிப்பு
சோழவந்தான், ஜூலை. 22-
சோழவந்தானில் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது சோழவந்தான் ஆர்சி தெருவில் உள்ள சலவைத் தொழிலாளி சுப்பிரமணி என்பவர்
சிவாஜி கணேசன் திருவுருவப்படத்தை வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனை நினைவு கூறும் வகையில் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதேபோல் சோழவந்தான் அருகே நெடுங்குளம் கிராமத்தில் மின்வாரிய ஓய்வு பணியாளர் கணேசன் என்பவர் சிவாஜியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார் இதில் ரிஷபம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர் திருவேடகம் கிராமத்தில் சிவாஜி கணேசன் திருவுருவ படத்திற்கு அவரதுரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.