August 8, 2025
ஊத்தங்கரை அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாம்

ஊத்தங்கரை அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாம்

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மகனூர்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. முகாமை ஊத்தங்கரை தாசில்தார் மோகன்தாஸ், பி.டி.ஓ பாலாஜி, திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் மூன்றம்பட்டி குமரேசன் ஆகியோர் கலந்து துவக்கி வைத்தனர்.

முகாமில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, எரிசக்தி துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மை நலத்துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, கால்நடை பராமரிப்பு பால்வளம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை,
குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, மாற்று திறனாளிகள் நலத்துறை, சிறப்பு திட்ட செயலாக்க துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்களின் மனுக்களை பெற்று உடனடியாக தீர்வு காணப்பட்டது. நிகழ்ச்சியில் தனி வட்டாட்சியர் குமரவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, சிங்காரப்பேட்டை காவல் ஆய்வாளர் செல்வராஜ், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் காந்தி,
விவசாயி தொழிலாளர் அணி அமைப்பாளர் சத்திய நாராயண மூர்த்தி, மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் சின்னதாய், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கலீல், ஒன்றிய துணை செயலாளர் ஜெயச்சந்திர பாண்டியன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் மோகன், உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *