
திண்டுக்கல் சொந்த இடத்தில் வீடு கட்டும் போது ஏற்பட்ட தகராறில் ஐந்து பேர் மீது வழக்கு.
திண்டுக்கல் நத்தம் சாலையில் தனது சொந்த இடத்தில் கலா ராணி என்பவர் வீடு கட்ட முயற்சித்துள்ளார். அப்போது திண்டுக்கல் மாநகராட்சி 34 வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் பாஸ்கர் தனது அடியாட்களுடன் வந்து தகராறு செய்துள்ளார். நிலத்தில் உரிமையாளர் கலா ராணி மீது மேற்கண்ட நபர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியும் அடிக்க முயற்சித்துள்ளனர் மேலும் வீடு கட்டுவதை தடுத்து நிறுத்தி உள்ளனர்.

இது சம்பந்தமாக கலா ராணி இடம் தனது பெயரில் உள்ளதற்கான ஆதாரங்களை வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அதே சமயத்தில் வீடு கட்டும்போது தகராறு செய்த பாஸ்கரன் உட்பட ஐந்து பேர் மீது திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் அதிமுக 34 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பாஸ்கரன் உட்பட ஐந்து பேர் மீது தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் இளங்கோ என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்ற பாஸ்கரன், மாரிக்கண்ணன், சதீஷ், பெரியசாமி ஆகியோரை தாலுகா போலீசார் தேடி வருகின்றனர்.