
நீரேத்தான் நவநீத பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்:
வாடிப்பட்டி, ஜூலை:21.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே நீரேத்தானில் பழமையும் பெருமையும் வாய்ந்த உத்ராயன தட்சினாயன காலங்களில் சூரியன் பெருமாளை வழிபாடு செய்யும் சிறப்புடையதும் கைகளில் வெண்ணெயுடன் அருள்பாலிக்கும் நவநீத பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது.
காலை 6:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம் கோபூஜையும் 7 மணிக்கு ரங்க மன்னார் ஆண்டாள் அழைப்பு முளைப்பாரி எடுத்தல் காப்பு கட்டுதல் நடந்தது. 10 மணி முதல் 11. 30 மணி வரை துவரிமான் பாலாஜி பட்டர் திருமாங்கல்ய தாரணம் நடத்தினார்.
12.30 மணிக்கு ரங்க மன்னர் ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது.
இதில், நாச்சியார் திருமொழி சேவா காலம் கச்சைகட்டி எதிராசர் ,காக்கூர் கண்ணன், திருமால் அடியார் குளாம்,வாடிப்பட்டி, மதுரை பாகவத கோஷ்டியினரும் பாடினர்.
மாலை 6 மணி முதல் 8:30 மணி வரை சுவாமிகள் ஊஞ்சல் ஆட்டம் மற்றும் லாலிபாட்டுடன் பஜனை நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதன் ஏற்பாடுகளை, பரம்பரை நிர்வாகிகள், அர்ச்சகர்கள்,பாகவதோத்தமார்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.