
மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்ட பணியாளர்களை விவசாய வேலைக்கு அனுமதிக்க வேண்டும் குறை தீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை
வாடிப்பட்டி, ஜூலை:11.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில், மாதாந்திர விவசாயிகள் குறை தீர் க்கும் கூட்டம் நடந்தது . இந்த கூட்டத்திற்கு, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பார்த்திபன் தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் புவனேஷ்வரி, தலைமை நில அளவையர் ராமகிருஷ்ணன், வேளாண்மை உதவி இயக்குனர் பாண்டி, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் தாமரைச்செல்வி, யூனியன் கமிஷனர் (கி.ஊ) கிருஷ்ணவேணி, பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயலட்சுமி, பெரியார் பாசன உதவிப் பொறியாளர் செந்தில்குமார்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வருவாய் ஆய்வாளர் ராஜா வரவேற்றார். இந்த கூட்டத்தில், கட்டக்குளம் கண்மாயில்
புதராக உள்ள பகுதிகளில் காட்டு பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. வனத்
துறையினர் அதை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பல நாள் நிறைவேறப் படாத கோரிக்கையான பெரியாறு வைகை பாசன தண்ணிரை சாத்தையாறு அணையுடன் இணைக்க வேண்டும், 45 கிராமங்களை சேர்ந்தவர்கள் போராட அனுமதி கொடுக்க வேண்டும் சாத்தையாறு அணையை தூர்வாரி சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.
நீரேத்தான் அய்யனார் கோயில் முதல் மேட்டுநீரேத்தான் வரை விடுபட்ட தார் சாலை மற்றும்
சரந்தாங்கி, முடுவார்பட்டி பகுதியில் சாலைகளை அமைக்க வேண்டும். மா, கொய்யா, சப்போட்டா நெல்லிக்காய் மானாவாரி பயிர்களுக்கு நல்ல விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தாதம்பட்டி கண்மாய் வரத்து கால்வாய் ஆகிரவப்புகளை அகற்றி சீரமைக்க வேண்டும். சிறுமலை ஓடை சர்வோதயா பண்ணை ஓடைகளை சீரமைக்க வேண்டும். குறைதீர்க்கும் கூட்டங்களில், கொடுக்கும் மனுக்களுக்கு தீர்வு பற்றி அடுத்த கூட்டங்களில் தெரிவிக்க வேண்டும். பொதுமக்களின் நலன் கருதி திருவேடகத்திற்கு மாற்றப்பட்ட
யூனியன் அலுவலகத்தை மீண்டும் வாடிப்பட்டிக்கு மாற்ற வேண்டும்.
இரவு நேரங்களில் வெளியூர் செல்லும் பேருந்துகள் வாடிப்பட்டி பஸ் நிலையத்திற்கு வந்து செல்ல வேண்டும். மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்ட பணியாளர்களை விவசாய வேலைக்கு அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. முடிவில், விவசாய சங்கத் தலைவர் ஜெயரட்சகன் நன்றி கூறினார்.






