
அய்யங்கோட்டையில் விளையாட்டு உபகரணங்கள் அன்னதானம் ஆர்.பி உதயகுமார் வழங்கினார்.
வாடிப்பட்டி, ஜூலை:11.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் , வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டையில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா100 கிராம கோவில்களில் 100 நாட்கள் அன்னதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, அலங்காநல்லூர் ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ.,கள் எம்.வீ.கருப்பையா, கி.மாணிக்கம், பேரவை மாநில இணைச் செயலாளர் ராஜேஷ் கண்ணா, வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், மாவட்டப்
பொருளாளர் வக்கீல் திருப்பதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்துகொண்டு , விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கி சிறப்புரையாற்றினார். இதில், ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.






