August 9, 2025
சோழவந்தான் பிரளயநாத சிவாலயத்தில் ஆனி மாத வளர்பிறை பிரதோஷ விழா திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

சோழவந்தான் பிரளயநாத சிவாலயத்தில் ஆனி மாத வளர்பிறை பிரதோஷ விழா திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

சோழவந்தான் ஜூலை 9

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு பிரளயநாத சிவ ஆலயத்தில் ஆனி மாத வளர்பிறை பிரதோஷ விழா நடைபெற்றது. நந்தி பகவானுக்கு பால் தயிர் வெண்ணெய் உள்பட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

தொடர்ந்து சுவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்தில் திருக்கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்தனர் அப்போது பக்தர்கள் ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா என்று மனமுருக வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாக அதிகாரி, மற்றும் எம் வி எம் குழும தலைவர் மணி முத்தையா, கலைவாணி பள்ளி நிர்வாகி வள்ளி மயில், எம் மருதுபாண்டியன் ஆகியோர் செய்து இருந்தனர். இதேபோல சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் சிவாலயம் திருவேடகம் அருள்மிகு ஏழவார் குழலி சமேத ஏடகநாதர் திருக்கோவிலில் மேலக்கால் ஈஸ்வரன் திருக்கோவில் உள்பட சோழவந்தான் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *