August 9, 2025
வாடிப்பட்டி அருகே நலத்திட்டம் மற்றும் அன்னதானம்.

வாடிப்பட்டி அருகே நலத்திட்டம் மற்றும் அன்னதானம்.

வாடிப்பட்டி, ஜூலை.9.

தமிழ்நாடு ரெட்டி நல சங்க மாநில பொதுச் செயலாளர் மற்றும் மதுரை மாவட்டத்
தலைவர் ராஜா பூர்ண சந்திரன் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, வாடிப்பட்டி அருகே நலத்திட்ட உதவிகள், மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

இந்த விழாவில், மதுரை மாவட்ட செயலாளர் மோனிகா சதீஷ் பொருளாளர் ரவிச்சந்திரன் மாநில இளைஞர் அணி செயலாளர் மணிகண்டன், மாவட்ட துணைத் தலைவர் சோமசுந்தரம், மாவட்ட துணைச் செயலாளர் மணிகண்டன், முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை, வாடிப்பட்டி ரெட்டி நல சங்கம் சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டது. வாடிப்பட்டி தலைவர் வக்கீல் சந்திரசேகர், செயலாளர் விஜயன் துணைச் செயலாளர்கள் அசோக்குமார், பாப்பையன், பொருளாளர் ரெங்கப ரெட்டி, இளைஞர் அணி துணைத் தலைவர் குரு மனோஜ், தகவல் தொழில் நுட்பம் கிருஷ்ணன் வாடிப்பட்டி மகளிர் அணி ஜீவா ரவி மற்றும் கல்பனா தேவி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னாள் வாடிப்பட்டி ரெட்டி நல சங்க தன் தலைவர் சீதாராமன், ஆர்.வி. செந்தில் ,
மாயகிருஷ்ணன் ஒன்றிய ரெட்டி நல சங்கத் பொறுப்பாளர், கார்த்திக் செல்வன், வசந்த்,கௌரவ ஆலோசகர் முரளி ராமசாமி, அகிலன், செயற்குழு உறுப்பினர்கள், குணசேகரன், சிபிராஜ் கோவிந்தராஜ், மாவட்ட மகளிர் அணி தலைவி சித்ரா, வக்கீல் செல்வகுமார், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மாநில நிர்வாகிகள், பேரூர் நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள், மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் ,பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
முடிவில், மதுரை மாவட்ட ரெட்டி நல சங்க துணைத் செயலாளர் பாலாஜி நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *