
ராமலிங்க சௌடாம்பிகை திருவிழா
மதுரை:
மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரில் உள்ள ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் 26-ம் ஆண்டு கத்தி போடும் விழா நடைபெற்றது.

பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு கையிலில் கத்தியை ஏந்தி மார்பில் கத்தியால் தட்டியவாறு 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் முக்கிய வீதிகளில் உலா வந்தனர்.
மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரில் உள்ள ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் 26 ஆம் ஆண்டு கரக உற்சவ விழா நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு கத்தி போடும் நிகழ்ச்சிக்காக கத்தி போட்டு வந்தனர்.
நிகழ்ச்சியில், வைகை ஆற்றில் இருந்து கிளம்பி கீழமாசிவிதி தெற்கு மாசி வீதி ஜெயவிலாஸ் மேம்பாலம் வில்லாபுரம் மீனாட்சி நகர் பகுதிகளில் கத்தி போடும் விழாவில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.