August 8, 2025
திண்டுக்கல் மாவட்டத்தில் 10 க்கும் மேற்பட்ட அரசு கள்ளர் பள்ளியில் ஒரு ஆசிரியர்களுடன் செயல்படுவதால் மாணவ, மாணவிகள் பாதிப்பு கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க பெற்றோர்கள், கள்ளர் கூட்டமைப்பினர், ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டத்தில் 10 க்கும் மேற்பட்ட அரசு கள்ளர் பள்ளியில் ஒரு ஆசிரியர்களுடன் செயல்படுவதால் மாணவ, மாணவிகள் பாதிப்பு கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க பெற்றோர்கள், கள்ளர் கூட்டமைப்பினர், ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை

நிலக்கோட்டை, ஜூலை. 8-

தமிழகத்தில் மதுரை திண்டுக்கல் தேனி மாவட்டங்களில் அரசு கள்ளர் சீரமைப்பு துறையால் 290 க்கு மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் திண்டுக்கல் பகுதியில் உள்ள காலிப்பணியிடங்கள் விபரம். ஒரு பள்ளிக்கு தலைமை ஆசிரியரும், இடைநிலை ஆசிரியரும் இல்லாத பள்ளிகள் சாமியார்பட்டி, சந்தமநாயக்கன்பட்டி, எல்லப்பட்டி, சின்னாளப் பட்டி,என். கோவில் பட்டி, சேடபட்டி, எஸ்.குரும்பபட்டி,, தெப்பத்துபட்டி, சென்னமநாயக்கன்பட்டி, இதேபோன்று. இடைநிலை ஆசிரியர் இல்லாத பள்ளிகள் சென்னமநாயக்கன்பட்டி, கொண்டம நாயக்கன்பட்டி, நரசிங்கபுரம், பொன்னிமான்துறை, சொட்டமாயனூர், ஒத்தையூர், கிருஷ்ணாபுரம், நாயக்கனூர், மத்தனம் பட்டி, எல்லப்பார்பட்டி, தலைமை ஆசிரியர் இல்லாத ஓராசிரியர் பள்ளிகள் காமு பிள்ளை சத்திரம், உச்சப் பட்டி, நாகைகவுண்டன்பட்டி, அக்கரைப்பட்டி, விளாம்பட்டி, சொக்கலிங்கபுரம், தெத்துப் பட்டி, போடிய கவுண்டன் பட்டி, கருத்தாண்டிபட்டி தும்மலப் பட்டி உள்ளிட்ட பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்காமல் காலியிடங்கள் ஆகவே 10 ஆண்டுகளாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால் ஓர் ஆசிரியர் மட்டும் உள்ள பள்ளிகளில் திடீரென்று ஆசிரியருக்கு உடல்நிலை சரியில்லாமல் விடுமுறையில் சென்று விட்டால் வேறு வழியில்லாமல் மாணவர்கள் பள்ளியில் பயில முடியாமல் வீட்டிற்கு சில சமயங்களில் செல்வதாகவும் பெற்றோர்கள் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 48 கள்ளர் தொடக்கப் பள்ளிகளிலும், 9 பள்ளிகளில் தலைமை ஆசிரியரும், இடைநிலை ஆசிரியரும் இல்லாத நிலையிலும், 7 பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாத நிலையிலும்,13 பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் இல்லாத நிலையில் ஏழை எளிய மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே படித்து நல்ல மதிப்பெண்களை இப்பள்ளியில் கடந்த காலங்களில் பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே முதலமைச்சரும், சம்பந்தப்பட்ட துறை அமையும் அதிகாரிகளும் ஆசிரியர்களை அதிகமாக நியமிப்பதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நிலக்கோட்டை பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் ராஜாராம் கூறியதாவது:- கடந்த கால அனுபவங்களில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக அரசு பள்ளி லட்சக்கணக்கான மாணவ மாணவிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திய கள்ளர் பள்ளிகளை அரசு மூடும் விழா காண வேண்டும் என்பதற்காக அந்த இனத்தை பழிவாங்க வேண்டும் என்ற நிலையோடு காலியிடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிப்பதை தவிர்த்தும், தமிழகத்தில் அமைதி பூங்காவா இருக்கக்கூடிய தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் விஷயத்தில் பெயர் மாற்றம் என்ற பெயரில் தினம்தோறும் பதட்டத்தை ஏற்படுத்துவதை முதலமைச்சர், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், கல்வி உயர் அதிகாரிகளும் கைவிட்டு விட்டு உடனடியாக திண்டுக்கல் தேனி மதுரை மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் அனைத்து தரப்பு சமுதாய மாணவ, மாணவிகளின் நலன் கருதி ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய பணியை உடனடியாக அவசர கருதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இக்கோரிக்கையை வழித்து வலியுறுத்தி காலியிடங்கள் இருக்கக்கூடிய கள்ளர் பள்ளிகள் முன்பு காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை வைத்து பல்வேறு போராட்டம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *