
ஸ்ரீபெரும்புதூரில் டாக்டர் கலைஞரின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு விளையாட்டு வீரர்களுக்கு பரிசளிப்பு மற்றும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
ஸ்ரீபெரும்புதூர்
திருப்பெரும்புதூர் தெற்கு ஒன்றிய திமுக மற்றும் பென்னலூர் ஊராட்சி திமுக சார்பில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் , திமுக நிர்வாகி கோ சி பாபு தலைமையில், முத்தமிழறிஞர் கலைஞரரின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து 12 அணிகள் பங்கேற்ற மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திருபெரும்புதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால் , நகர செயலாளர் சதீஷ்குமார், நகர் மன்ற தலைவர் சாந்தி சதீஷ்குமார், பென்னலூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொ சி பாபு, தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் கணேஷ் பாபு,, தணிகாசலம், சர்தார் பாட்ஷா, டோமினிக், மனோஜ், சுதாகர் ,கல்பனா உள்ளிட்ட காஞ்சி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் திருப்பெரும்புதூர் தெற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளையும் கோப்பைகளையும் வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து, பென்னலூர் ஊராட்சியில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளவர்களுக்கு உதவித்தொகை மற்றும் ஏழை எளிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பென்னலூர் ஊராட்சி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கோ சி பாபு ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஒன்றிய மகளிர் அணி துணை அமைப்பாளர் கல்யாணி, ஒன்றிய மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் பூஞ்சோலை, கிளைக் கழக மகளிர் அணி கனகவல்லி, மல்லிகா, நளினி . கிளைக் கழக செயலாளர்கள் ரமேஷ்,செல்வம,
இளைஞர் அணி அமைப்பாளர்கள் முத்து, முரளி ,சுரேஷ் , முனுசாமி . மற்றும் செல்வகுமார் உள்ளிட்ட பென்னலூர் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற்றது.