
சோழவந்தான் அருகே பேருந்து வசதி இல்லாததால் ஆபத்தான முறையில் ஆட்டோவில் தொங்கி செல்லும் கல்லூரி மாணவர்கள்
சோழவந்தான், ஜூலை : 7.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில்,
சுமார் 3009க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு பயிலும் மாணவர்கள் வாரத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தங்களின் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நண்பர்களை சந்தித்து விட்டு அன்று இரவே கல்லூரிக்கு திரும்புவது வழக்கம் .

இந்த நிலையில், கல்லூரியில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் மாணவர்கள் வாரந்தோறும் 500க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், இவர்கள் கல்லூரி பேருந்து நிலையத்திலிருந்து வாடிப்பட்டி திருமங்கலம் மதுரை செக்கானூரணி சோழவந்தான் போன்ற பகுதிகளுக்கு சென்று அங்கிருந்து தங்களின் சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
ஆனால், இவர்களுக்காண பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்படுவதால் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 20க்கும் மேற்பட்ட ஆட்டோகளில் ஆட்டோவிற்கு 30 முதல் 50 பேர் என ஆபத்தான முறையில் தொங்கிக்கொண்டு சென்று வருகின்றனர். இது குறித்து,
கல்லூரி நிர்வாகம் சார்பிலும் மாணவர்கள் சார்பிலும் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு தொடர்ச்சியாக கோரிக்கை மனு வழங்கியும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டுமாவது கூடுதல் பேருந்துகளை கல்லூரியிலிருந்து அருகில் உள்ள நகரங்களுக்கு பேருந்து வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வாரந்தோறும் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இந்த சம்பவத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கல்லூரி நிர்வாகிகள் புகார் தெரிவிக்கின்றனர் .
அரசு போக்குவரத்து கழகம், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை விவேகானந்த கல்லூரியில் இருந்து மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் பல ஊர்களில் ஆட்டோக்கள், மினி பஸ்கள் போல செயல்படுகிறது என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆட்டோவில் மட்டும் 3 பிளஸ்..1 என , வாசகங்களை எழுதிவிட்டு, பொதிகளை ஏற்றுவது ஆட்டோக்களில் பயணிகளை ஏற்றுகின்றனராம். மதுரையில் அண்ணாநகர், அண்ணா பஸ் நிலையம், சிம்மக்கல், மாட்டுத்தாவணி, கருப்பாயூரணி, வாடிப்பட்டி, அலங்காநல்லூர், திருமங்கலம், மேலூர், திருப்பரங்குன்றம், பழங்காநத்தம், காளவாசல், தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஷேர் ஆட்டோக்கள், அதிக பயணிகளை ஏற்றிக் கொண்டு சாலைகளில், அதிக வேகமாக செல்கிறது.
மேலும், மதுரை அண்ணாநகர் சுகுணா ஸ்டோர் நவீன் பேக்கரி அருகே சாலையில் நடுவே ஆட்டோக்களை நிறுத்தி, அரசு சிட்டி பஸ்கள் போல கூவி, கூவி அழைத்து ஆட்டோக்களில் டிரைவர்கள் பயணிகளை ஏற்றுகின்றனர். கருப்பா யூனியனில் அப்பர் மேல்நிலைப்பள்ளி அருகே ஆட்டோக்களை சாலையில் நிறுத்தி ஆட்களை ஏற்றுவதால், போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.
இது குறித்து மதுரை மாவட்ட காவல் துறை உயர் அதிகாரிகள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், விதிகளை மீறும் ஆட்டோக்களை கட்டுப்படுத்த ஆர்வம் காட்ட வேண்டும்.
மதுரை நகரில் தலைக் கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பார்த்தும் பிடிக்கும் போக்குவரத்து போலீஸார், பெர்மிட் இன்றி, அதிக பயணிகளை ஏற்றிக் கொண்டு ஆட்டோக்களை கட்டுப்படுத்த ஆர்வம் காட்ட சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.