
நிலக்கோட்டை அருகே சளி டானிக் குடித்த குழந்தை பரிதாபமாக சாவு
நிலக்கோட்டை, ஜூலை.5-
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள சி.புதுரை சேர்ந்த சின்ன பாண்டி வயது 30. இவர் டேங்கர் லாரி டிரைவர் ஆவார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவருக்கு தற்போது பிரணித் வயது 1 1/2 ஆண் குழந்தை உள்ளது.
இந்தக் குழந்தைக்கு கடந்த 26.6.2025 தினங்களுக்கு முன்பு அதிகமான சளி பிடித்ததை தொடர்ந்து சளிக்கு டானிக் வாங்கி கொடுத்து அன்று இரவு தூங்க வைத்துள்ளனர்.
அன்று அதிகாலை 4 மணிக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே உடனடியாக வத்தலகுண்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
அங்கும் குழந்தையின் உடல்நிலை சரியில்லாததால் மேலும் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் கொண்டு மேல் சிகிச்சை அளித்து வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு குழந்தை பரிதாபமாக இறந்து போனது.
இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அபினேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
சளி மருந்து குடித்து குழந்தை இறந்து போன சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.