
கொடிமங்கலத்தில் ரூபாய் 25 லட்சம் மதிப்பில் இரண்டு கூடுதல் பள்ளி கட்டிடம் முன்னாள் அமைச்சர் துவக்கி வைத்தார்.
சோழவந்தான்.
மதுரை அருகே, கொடிமங்கலத்தில் ரூபாய் 25 லட்சம் மதிப்பில் இரண்டு கூடுதல் பள்ளி கட்டிடம் முன்னாள் அமைச்சர்செல்லூர் கே.ராஜு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
மதுரை மாவட்டம் , மேற்கு தொகுதிக்குட்பட்ட கொடிமங்கலத்தில் ரூபாய் 25 லட்சம் மதிப்பில் இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை மாணவ மாணவிகளின் பயன்பாட்டிற்காக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் திரவியம் , பரவை பேரூர் செயலாளர் ராஜா, கொடிமங்கலம் கிளைச் செயலாளர் கருப்பண்ணன், இளைஞரணி செயலாளர் வெற்றி, கீழமாத்தூர் நாகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர் .
தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறுகையில், மதுரை மேற்கு தொகுதியில் சட்டமன்ற தொகுதி நிதியில் இருந்து பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தி இருக்கிறேன். சாதாரண தொண்டனாக இருந்த என்னை உலகறிய செய்தது பொது மக்களாகிய நீங்கள் தான் உங்களுக்கு என்றென்றைக்கும் நன்றி கடனாக இருப்பேன் .
வரும் காலங்களிலும் தொடர்ந்து எனக்கு ஆதரவு தர வேண்டும் என, கேட்டுக்
கொண்டார்.