March 2, 2026
மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த வழிகாட்டு நிகழ்ச்சி

மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த வழிகாட்டு நிகழ்ச்சி

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர்மன்ற மேல்நிலைப் பள்ளியில் பொருளியல் மன்றம் சார்பாக உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியரும் பள்ளியின் முதுகலை பொருளாதார ஆசிரியருமான பொன்னுசாமி தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பேட்டை மா.தி.தா இந்துக்கல்லூரி பொருளியல் துறை தலைவர் திரு.சீதாராமன் அவர்கள் கலந்து கொண்டு பொருளியல் படிப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்களை மாணவர்களுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியின் நன்றி உரையினை பள்ளியின் உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியரும் முதுகலை உயிரியல் ஆசிரியருமான திரு சரவணன் ஆற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *