March 3, 2026
நிலக்கோட்டைய அருகே பிளஸ் 1 வகுப்பு படிக்கும் சிறுமியை கர்ப்பிணி ஆக்கிய வாலிபருக்கு போச்சோ போலீஸ் வலை வீச்சு

நிலக்கோட்டைய அருகே பிளஸ் 1 வகுப்பு படிக்கும் சிறுமியை கர்ப்பிணி ஆக்கிய வாலிபருக்கு போச்சோ போலீஸ் வலை வீச்சு

நிலக்கோட்டை, ஜூலை.3-

நிலக்கோட்டை தாலுகா பட்டிவீரன்பட்டி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தற்போது பிளஸ் 1 வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தனது தாயாரிடம் சிறுமி சில நாட்களாக உடல்நிலை சரியில்லை என்று கூறவே தாயார் பட்டிவீரன்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சென்று சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது அங்கு தாயாரிடம் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

இதன் பின்னர் சிறுமியின் தாயார் உன்னுடன் பழகியது யார் என்பதை விசாரித்த போது சிறுமி நிலக்கோட்டை அருகே கோடாங்கி நாயக்கன்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்த பால்சாமி என்பவர் மகன் பாஸ்கர் வயது 20. என்பவர் ஆசை வார்த்தை கூறி சிறுமியுடன் உல்லாசமாக இருந்ததாக தெரிவித்தார். இதுகுறித்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வியிடம் கொடுத்த புகாரின் படி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரி போச்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பாஸ்கர் வலை வீசி தேடி வருகின்றனர்.

11ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை கர்ப்பம் ஆக்கி வாலிபர் போலீசார் தேடும் சம்பவம் இப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *