August 8, 2025
பழனியில் திருக்கோவில்களின் சார்பில் திருமண விழா.

பழனியில் திருக்கோவில்களின் சார்பில் திருமண விழா.

2025 2026ம் ஆண்டின் சட்டபேரவை மானியக்கோரிக்கையின் போது மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களால் அறிவிப்பு எண்.1ன்படி திருக்கோயில் சார்பாக 4 கிராம் தங்கத் தாலி உட்பட சீர் வரிசைகள் வழங்கி கடந்த மூன்று ஆண்டுகளிலும் 1800 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இவ்வாண்டும் “பொருளாதாரத்தில் பின்தங்கிய இணைகளுக்கு திருக்கோயில் சார்பாக 4 கிராம் தங்கத் தாலி உட்பட ரூ.70,000/- மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்படும்” என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2024 2025ம் ஆண்டு சட்டபேரவை அறிவிப்பின்படி பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் 5 இணைகளுக்கு 4 கிராம் தங்கத் தாலி உட்பட சீர்வரிசைகள் வழங்கி கடந்த 03.03.2025 அன்று ஒட்டன்சத்திரம் அருள்மிகு குழந்தைவேலப்பர் திருக்கோயில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த 05.06.2025 இத்திருக்கோயில் சார்பில் 2 இணைகளுக்கு 4 கிராம் தங்கத் தாலி உட்பட சீர்வரிசைகள் வழங்கி பழனி, அருள்மிகு குழந்தைவேலாயுதசுவாமி (திருஆவினன்குடி) திருக்கோயிலில் திருமணம் நடைபெற்றது. மேற்படி 7 இணைகளுக்கு சுமார் ரூ.4.00 இலட்சம் செலவில் இத்திருக்கோயில் சார்பில் திருமணம் நடத்திவைக்கப்பட்டது.

இவ்வாண்டு 2025- 2026ம் ஆண்டுக்கு பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் சார்பில் 12 இணைகளுக்கு 4 கிராம் தங்கத் தாலி உட்பட சீர்வரிசைகள் வழங்கி இன்று 02.07.2025 அன்று காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் ஒட்டன்சத்திரம், அருள்மிகு குழந்தைவேலப்பர் திருக்கோயிலில் திருமணம் நடைபெற்றது. மேற்படி 12 இணைகளுக்கு சுமார் ரூ. 9 இலட்சம் செலவில் திருமணம் நடத்திவைக்கப்பட்டது.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் இதுவரை 19 இணைகளுக்கு 4 கிராம் தங்கத் தாலி உட்பட சீர்வரிசைகள் வழங்கி திருமணம் நடத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *