
நிலக்கோட்டையில் வத்தலக்குண்டு கள்ளர் விடுதியை இடத்தில் சமுதாய கூடம் கட்டிடம் எதிர்ப்பு தெரிவித்து 19ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம்
நிலக்கோட்டை,ஜூன்.2-
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு சார்பாக மாநில பொதுச் செயலாளர் ராஜாராம் தலைமையில் மகாசன கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநில பொருளாளர் இளங்கோ முன்னிலை வைத்தார்.கூட்டத்திற்கு செயலாளர் முருகன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டம் , வத்தலக்குண்டு அரசு கள்ளர் விடுதி கள்ளர் கல்விக் கழகத்திற்கு சொந்தமான இடத்தில் சமுதாயக்கூடம் கட்டுவோம் என்ற முடிவை வத்தலகுண்டு பேரூராட்சி நிர்வாகமும், நிலக்கோட்டை வருவாய்த்துறை நிர்வாகமும் தன்னிச்சையான முடிவை மேற்கொள்ளும் நிலைப்பாட்டை கண்டித்து வருகிற 19.7.2025 அன்று நிலக்கோட்டை பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டமும், அமைதி பேரணியும் நடத்துவது என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தமிழக அரசு உடனடியாக டிஎன்டி மக்களுக்கு டி. என்.டி /டி.என்.சி என்ற 2 சாதி சான்றிதழ்களை வழங்குவதை நிறுத்திவிட்டு டி .என் .டி என்ற ஒற்றைச் சாதி சான்றாக வழங்க கோரியும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதேபோன்று சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித் குமார் என்ற இளைஞரை அடித்துக் கொலை செய்த காவல்துறையையும் கூட்டம் வன்மையாக கண்டித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
வருங்காலங்களில் இது போன்ற குற்றங்கள் நிகழாமல் இருக்க காவல் நிலையங்களில் நடக்கும் குற்ற கண்காணிக்க நிரந்தரமான அரசு தரப்பில் ஒரு நபர் கமிஷனர் நியமிக்கவும் இக்கூட்டத்தில் கோரிக்கை வைத்து வலியுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆரோக்கியம், மாநில கொள்கை பரப்பு செயலாளர் வக்கீல் மாயாண்டி, மாவட்ட நிர்வாகிகள் ராஜாங்கம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.