March 3, 2026
மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட கல்வித்துறை எடுத்த முயற்சி காரணமாக அரசு பள்ளி மாணவர் உயர் கல்வியில் சேர்ந்தார்

மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட கல்வித்துறை எடுத்த முயற்சி காரணமாக அரசு பள்ளி மாணவர் உயர் கல்வியில் சேர்ந்தார்

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளி மாணவர் சந்தன மாரியப்பன் இவர் இந்த ஆண்டு நடைபெற்ற பொது தேர்வில் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியாத நிலையில் இருந்தார். இதனை அறிந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட கல்வித்துறை சார்பாக எடுக்கப்பட்ட பெரும் முயற்சிகள் காரணமாக பேட்டை ம.தி.தா இந்து கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் தமிழ் வழியில் தற்போது சேர்ந்துள்ளார்.

மாணவர் சந்தன மாரியப்பன் மற்றும் மாணவரின் பெற்றோர் மாணவர் கல்லூரி சேர்வதற்கு உதவி புரிந்த மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சுகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு. சிவகுமார், தலைமை ஆசிரியர் திருமதி இவாஞ்சலின், மாணவரின் பொருளாதார ஆசிரியர் பொன்னுசாமி முன்னாள் மாணவர் மும்பையைச் சேர்ந்த மெய்யழகன் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *