June 30, 2025
புதுச்சேரி உப்பளம் தொகுதியில் சாலை அமைக்கும் பணிகளை அனிபால் கென்னடி எம்எல்ஏ ஆய்வு செய்தார்.

புதுச்சேரி உப்பளம் தொகுதியில் சாலை அமைக்கும் பணிகளை அனிபால் கென்னடி எம்எல்ஏ ஆய்வு செய்தார்.

புதுச்சேரி ஜூன் 23

புதுச்சேரி உப்பளம் தொகுதி கோலாஸ் நகர்  ஜெயராம் செட்டியார் தோட்டம் பகுதியில் ரூபாய் 40 லட்சம் செலவில் சாலை மற்றும் சைடு வாய்க்கால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையினை சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் தொடங்கி வைத்து பணிகள் நடைப்பெற்று வரும் நிலையில் அப்பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட கோலாஸ் நகர் ஜெயராம் செட்டியார் தோட்டம் பகுதியில் ரூபாய் 40 லட்சம் செலவில் சாலை, மற்றும் சைடு வாய்க்கால், அமைக்கும் பணிக்கான பூமி பூஜையினை சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் தொடங்கி வைத்த நிலையில் அப்பணிகள் நடைபெறுவதை நேரில் சென்று சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் . 

வாய்க்கால் கட்டும் பணிகள் முடிவடைந்த நிலையில் சாலை அமைக்கும் பணி இன்னும் நிறைவு பெறாமல் இருப்பதை கேட்டறிந்தார். அப்பொழுது அப்பகுதியில் வசிக்கும் முக்கியப் பிரமுகர்கள் வசந்தி அம்மா, முத்து அவர்களும் சாலை முழுவதும் மணல், ஜல்லி ,பரவிக்  கிடப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக சட்டமன்ற உறுப்பினரிடம்  கூறினார்கள் .உடனே விரைந்து சென்று அப்பகுதியை ஆய்வு செய்து உடனடியாக அதிகாரிகளை வரவழைத்து  அப்பகுதியில் இருந்த   மணல், ஜல்லிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்து இடையூறுகளை நீக்கினார். 

மேலும் அதிகாரிகளிடம் வெகு விரைவாக சாலைகளை அமைக்க வேண்டும். இன்னும் 15 நாட்களுக்குள் எங்கெல்லாம் சிறு சிறு குறைகள் உள்ளதோ அவை யாவையும் சிறப்பான முறையில் சீர்செய்து தரவேண்டும் என்றும்  கட்டிய சைடு வாய்க்கால் சரியான முறையில் கட்டவில்லை என்றும் மீண்டும் முறையாக கட்டித்தாருங்கள் 

இப்பகுதியில் அமைக்கும் சாலைகள் மற்றும் சைடு வாய்க்கால்கள் யாவும் சிறப்பான முறையில் கட்டித் தாருங்கள் என்று அதிகாரிகளை சட்டமன்ற உறுப்பினர்  கேட்டுக் கொண்டார் . அவருடன் நகராட்சி அதிகாரிகள்  துணை செயற்பொறியாளர்* யுவராஜ் இளநிலைப் பொறியாளர் சண்முக சுந்தரம்  மற்றும் திமுக துணை செயலாளர் ஆரோக்கியராஜ், இருதயராஜ், மற்றும் ஊர் முக்கியப் பிரமுகர் முத்து ஆகியோர் உடனிருந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.