
101 ஜமீன் தண்டலத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி புதியவகுப்பறை கட்டிடம் திறப்பு விழா
ஸ்ரீபெரும்புதூர்: ஜூன் 23
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தனியார் நிறுவனம் மூலம் கூடுதல் வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது,

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள தண்டலம் ஊராட்சியில் அரசினர் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது இப்பள்ளியில் சுற்று வட்டார பகுதியில் உள்ள சுமார் 15 கிராமங்களைச் சார்ந்த 700-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர் ,
இந்நிலையில் கூடுதல் வகுப்பறைகள் தேவையின் காரணமாக “ஓர்லிகான் பால்சர் கோட்டிங் இந்தியா பிரைவேட் லிமிடெட்”எனும் தனியார் நிறுவனம் மூலம் 45 லட்சம் மதிப்பிலான மூன்று வகுப்பறைகள் கொண்ட கட்டிடம்கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது
ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார், துணைத் தலைவர் வேலாயுதம், பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகர், உதவி தலைமை ஆசிரியர் குமார், வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலர் சரவணன், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,
கூடுதல் வகுப்பறை கட்டிடத்தினை “ஓர்லிகான் பால்சர் கோட்டிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் ” நிர்வாக இயக்குனர் பிரவீன் ஷீர்ஸ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்,நிதி நிர்வாக இயக்குனர் விவேக் பண்டிட், விற்பனை மற்றும் செயல்பாட்டை இயக்குனர் பாஸ்கர் ராமன், விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் துணைத்தலைவர் கரண்த்,நிதி மற்றும் கணக்கியல் துணைத் தலைவர் அசோக் கோஹில், செயலாளர் இந்திய வெட்டும் கருவி உற்பத்தி சங்கம் சுப்பிரமணியன் ,விவசாய கருவிகள் தலைமை மனோஜ் குமார், தென்னிந்திய பிராந்திய தலைவர் கோட்டீஸ்வரன் ,மனித வள மேம்பாட்டு முதன்மை மேலாளர் அஞ்சலி, மனித வள மேம்பாட்டு மேலாளர்கள் கார்த்திகேயன், பார்த்திபன் ,ஆகியோர் உடன் இருந்தனர்.
மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் துணைத் தலைவர் உறுப்பினர்கள் மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற்றது.