
புதிய சிற்றுந்து தொடக்கம். ஆட்டோக்களை கண்டு கொள்ளாத போலீஸார்.
மதுரை:
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் ,
மதுரை மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் இருந்து புதிய விரிவான சிற்றுந்து திட்டத்தின் கீழ் 32 சிற்றுந்து (MINI BUS) வழித்தடங்களுக்கான அனுமதி ஆணைகளை வழங்கி தொடங்கி வைத்தார்கள்.
மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த்
, மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் , மாநகராட்சி துணை மேயர் நாகராஜன்,
இணை போக்குவரத்து ஆணையர் சத்திய நாராயணன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கார்த்திகேயன், பாலமுருகன், சித்ரா ஆகியோர் உடன் உள்ளனர். மதுரையில் பல ஆண்டுகளாக பெர்மிட் இன்றி பல ஆட்டோக்கள் தொடர்ந்து இயங்கி வருகிறது.
மதுரை அண்ணாநிலையம்,சிம்மக்கல்,பெரியார், தெற்கு வாசல், தெப்பக்குளம்,ஃ மாட்டுத் தாவணி, கோரிப்பாளையம், திருநகர், திருப்பரங்குன்றம், சோழவந்தான், சமய நல்லூர், பரவை, விளாங்குடி, கூடல் நகர், திருமங்கலம், வாடிப்பட்டி, மேலூர், கருப்பாயூரணி உள்ளிட்ட மதுரை மாவட்டத்தில் பல பகுதிகளில் ஷேர் ஆட்டோக்கள் மினி, சிட்டி பஸ்களாக செயல்படுகிறது.
மேலும், ஆட்டோவில், அதிக பயணிகளை ஏற்றிக் கொண்டு தொடர்ந்து போக்குவரத்து அதிகாரிகள், போலீஸாருக்கு தெரிந்தே செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆட்டோக்கள் பல சாலை விதிமுறைகளை மீறி அதிக வேகமாக இயக்குவதால், அடிக்கடி சாலை விபத்துகளும் நிகழ்வதாக பொது மக்கள் குறை கூறுகின்றனர்.
இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, வட்டார போக்குவரத்து அலுவலர்கள், போலீஸார், போக்குவரத்து காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்களுக்கு சாலை விதிகளை மீறும் ஆட்டோக்களை கட்டுப்படுத்த அவ்வப்போது ஆலோசனைகள் வழங்க வேண்டும் என, பொது மக்கள் கோரியுள்ளனர்.






