March 5, 2026
பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்ட எம்.எல்.ஏ.

பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்ட எம்.எல்.ஏ.

தேனிமாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் ஜெயமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் முதலக்கம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். சரவணக்குமார் எம்எல்ஏ பெற்றார்.

மேலும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு வருவாய் துறையினர் மற்றும் அரசு துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். தொடர்ந்து பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொதுமக்களிடம் எம் எல் ஏ கே.எஸ். சரவணக்குமார் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மலர்விழி, ராகவன், உதவி பொறியாளர் அஜய், திமுக தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர் பாஸ்கரன், ஊராட்சி செயலர்கள் கோபால், செல்லப்பாண்டி, விஏஓ ராஜவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *