March 3, 2026
தாதம்பட்டி சடையாண்டி கோயில் திருவிழா

தாதம்பட்டி சடையாண்டி கோயில் திருவிழா

வாடிப்பட்டி, ஜூன்.12-
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 8வது வார்டு தாதம்பட்டி சடையாண்டி கோவில் வைகாசி உற்சவ திருவிழா 3 நாட்கள் நடந்தது. முதல் நாள் இரவு 7.45 மணிக்கு சக்தி கரகம் ஜோடனை செய்ய புறப்பாடு நடந்தது. 9.30 கரகம் எடுத்து கோவிலை வந்தடைந்தது சிறப்பு பூஜை வழிபாடு செய்யப்பட்டது.

10.30 மணிக்கு பூசாரி கிடா வெட்டுதல் 10.45 பெண்கள் முளைப்பாரி எடுத்து வருதல்
11.45 மணிக்கு மாவிளக்கு எடுத்தல் நடந்தது.12.30 பூசாரி பொங்கல் வைத்தல் அதிகாலை 5 மணிக்கு பொதுமக்கள் பொங்கல் வைத்து கிடா வெட்டுதல் நடந்தது. இரண்டாம் நாள் மாலை 7 மணிக்கு முளைப்பாரி வழிபாடு நடந்தது. மூன்றாம் நாள் காலை 9 மணிக்கு முளைப்பாரி கரைக்கப்பட்டது. இதன் ஏற்பாடுகளை தாதம்பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *