
வேங்கை சந்திரசேகரன் மறைவு.
தமிழக ஜனதாதளம் (TJD) சார்பாக இரங்கல்.
தமிழக ஜனதாதளத்தின் மாநில துணை தலைவர் திரு.வேங்கை சந்திரசேகரன் அவர்கள் இன்று 10.6.2025 காலை திருச்சியில் காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
திரு.வேங்கை சந்திரசேகரன் அவர்கள் பெருந்தலைவர் காமராசரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவருடைய பொது வாழ்க்கையை எஸ்தாபன காங்கிரசில் தொடங்கி ஜனதா, ஜனதாதளத்தில் பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டவர்.
பெருந்தலைவர் காமராசரின் புகழை தமிழகம் முழுவதும் பரப்புரை செய்தவர். தமிழகத்தில் அவருடைய கால் படாத இடங்களே இல்லை. செவாலியர் நடிகர்திலகம் சிவாஜிகணேசனுடன் நெருங்கி பழகியவர். திருச்சியில் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் சிலையை நிறுவ காரணமாக இருந்தவர். அவரது இழப்பு தமிழக ஜனதாளத்திற்கு மிகவும் பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் ஜனதாதள தொண்டர்களுக்கும் அவரது குடும்பத்தார்க்கும் தமிழக ஜனதாதளம் (TJD) சார்பாக ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்தனர்.






