March 3, 2026
பழனி அருகே ஆயக்குடியில் காணொளியின் மூலம் நூலக இணைப்பு கட்டிட திறப்பு விழா.

பழனி அருகே ஆயக்குடியில் காணொளியின் மூலம் நூலக இணைப்பு கட்டிட திறப்பு விழா.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட 13 வது வார்டு பகுதியில் அமைந்துள்ள நூலக கட்டிடத்தில் போதுமான வசதிகள் இல்லாததால் நூலகத்துக்கு வரும் வாசகர்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இதனையடுத்து பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ. செந்தில் குமாரிடம் நூலக வாசிப்பாளர்கள் சார்பாக கோரிக்கை மணு அளித்தனர்.

தொடர்ந்து நூலகத்தில் போதுமான இடவசதி இல்லாததால் உட்கார்ந்து படிப்பதற்கு கட்டிட வசதி ஏற்படுத்தி தரப்பட வேண்டும் என மணுவில் கூறப்பட்டிருந்தன.

இதனை தொடர்ந்து பழனி சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரையின் பேரில் நூலக கட்டிட மானியம் 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதியில் இருந்து
22 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு கூடுதல் கிளை நூலக கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்று கட்டிடப் பணிகள் விரைவாக நடைபெற்றன.

இதனை தொடர்ந்து நூலக இணைப்பு கட்டிடம் கட்டப்பட்டு முடிக்கப்பட்ட நிலையில் தமிழக முதலமைச்சர் காணொளியின் மூலம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றன.

தொடர்ந்து இந்நிகழ்வில் ஆயக்குடி பேரூர் செயலாளர் சின்னத்துரை பேரூராட்சி தலைவர் மேனகா ஆனந்தன் துணைத் தலைவர் சுதா மணி கார்த்திகேயன்
13 வது வார்டு கவுன்சிலர் காட்டப்பன் ஆகியோர் தலைமையில்
விழா நிகழ்ச்சி நடைபெற்றன.

மேலும் இந்நிகழ்வில் அனைத்து கவுன்சிலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் நூலகத்தை பயன்படுத்தும் வாசகர்கள் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றன…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *