
ஆயக்குடி பேரூராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் தூய்மை பணியாளராக மாறி குப்பையை அள்ளிய பெண் விசிக கவுன்சிலரால் பரபரப்பு..
இந்நிலையில் 16வது பகுதியில் பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் கடந்த 20 நாட்களாக குப்பைகள் மற்றும் சாக்கடைகள் அள்ளப்படாமல் தேங்கி காணப்பட்டு வந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து கவுன்சிலர் சரஸ்வதி வாஞ்சிநாதன் பேரூராட்சி அதிகாரிகளிடம் என் வார்டில் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் குப்பைகளை அகற்ற வேண்டும் சாக்கடைகளை தூர்வாரப்பட வேண்டும் என மனு செய்துள்ளார்.
தொடர்ந்து அதிகாரிகள் மனுவை குப்பையில் வீசி விட்டு அப்பகுதியில் குப்பையில் அள்ளாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து சரஸ்வதி வாஞ்சிநாதன் செயல் அலுவலரிடம் தொடர்பு கொண்ட பொழுது தான் விடுமுறையில் இருப்பதாகவும் தலைமை எழுத்தர் சுசீலா என்பவர் தற்போது நிர்வாக பொறுப்பை கவனித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து தங்கள் பகுதியில் உடனடியாக குப்பைகள் மற்றும் சாக்கடைகள் தூர்வாரப்பட வேண்டும் என வலியுறுத்தி நிலையில் அதிகாரியான சுசீலா உங்கள் பகுதியில் குப்பைகள் அல்ல முடியாது உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள் என்று அதிகார தோரணையில் பேசியதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டன.
மேலும் கவுன்சிலர் சரஸ்வதி வாஞ்சிநாதன் தங்கள் பகுதியுள்ள பெண்களை திரட்டி தாங்களாகவே குப்பைகளை அள்ளிய அவல நிலை ஏற்பட்டன.
தொடர்ந்து குப்பைகள் அதிகரித்துள்ள நிலையில் குழந்தை முதல் பெரியவர்கள் வரை பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருவதால் தாங்களாகவே குப்பைகளை சுத்தம் செய்தோம்.மேலும் அலட்சியப் போக்குடன் காணப்பட்டு வரும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.






