
மல்லிகை நகர் குடியிருப்பு சங்கத்தின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மல்லிகை நகர் குடியிருப்பு சங்கத்தின் நிர்வாக குழு கூட்டமும்,மாணவச் செல்வங்களுக்கு பாராட்டு விழாவும் மல்லிகை நகரில் நடைபெற்றது.
இதற்கு தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார்.செயலாளர் ரமேஷ் குமார் வரவேற்புரை ஆற்றினார்.
மாணவச் செல்வங்கள் சோபிகா மற்றும் பார்த்தசாரதி ஆகிய 2 பேரையும் பாராட்டி சண்முகம்,ஜெயபால், சின்ன காளை,பாண்டியராஜன்,சோலை ராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.பின்பு மாணவர்களுக்கு பொன்னாடை மற்றும் நினைவு பரிசுகளை சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள் வழங்கினர்.
கூட்டத்தில் சீனிவாசன், முத்தையா,சண்முகம்,ஈஸ்வரி,ரேவதி, கங்காதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.நிறைவாக பொருளாளர் சேதுராமன் நன்றி கூறினார்.