March 3, 2026
பழனி மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடிகள் தஞ்சம்.

பழனி மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடிகள் தஞ்சம்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி மகளிர் காவல் நிலையத்தில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்ற இருவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் சாதி மறுப்பு என்பதால் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த நிலையில் பிரியதர்ஷினியின் உறவினர்கள் மற்றும் உடன்பிறப்புகளால் எதிர்ப்புகள் தெரிவிக்கவே இருவரும் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் பழனி மகளிர் காவல் நிலையத்தில் இருவரும் தஞ்சம் அடைந்தனர். இதனை அறிந்து வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் பாவேந்தன் தொகுதி செயலாளர் போர் கொடியேந்தி மற்றும் வழக்கறிஞர் கலைஎழில்வாணன், தமிழ்நாடு அருந்ததியினர் நலச்சங்கம் தலைவர் நாகராஜ், ஆகியோர் தலைமையில் காவல் நிலைய வளாகத்தில் இருவருக்கும் சாதி மறுப்பு திருமணம் செய்து வைக்கப்பட்டன. தொடர்ந்து பெற்றோர்கள் முன்னிலையில் காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து இருவருக்கும் பெண் வீட்டார் மூலம் எதிர்ப்பு அல்லது மிரட்டல் விட்டால் காவல்துறை மூலம் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை மூலம் எச்சரிக்கை விடப்பட்டு சாதி மறுப்பு திருமணம் நடைபெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *