August 7, 2025
ஜெனகை மாரியம்மன் ஆலய திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

ஜெனகை மாரியம்மன் ஆலய திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

சோழவந்தான்:

மதுரை, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேரோட்டம் வரும் ஜூன். 17ஆம் தேதி நடைபெறுகிறது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. திருவிழா நடைபெறுவதை ஒட்டி, கோவில் உள் பிரகாரம் வளாகம் கோவிலின் வெளிப்புறம் உள்ளிட்ட பகுதிகளில் மின்னொளி அமைக்கப்பட்டு இரவை பகலாக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது . கொடியேற்றத்துக்கு முன்பாக சிறப்பு யாகம் நடைபெற்றது.

அர்ச்சகர் சண்முகம் பூஜைகள் செய்தார். அதனைத் தொடர்ந்து, கொடியேற்றத்
திற்கான பூஜை பொருட்களுடன் சோழவந்தானின் நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்தனர் பின்னர் கோவிலில் உள் பிரகாரத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. கூடியிருந்த பொதுமக்கள் பக்தர்கள் பெண்கள் அருள் வந்து ஆடினர் கொடியேற்றத்தை தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் காப்பு கட்ட தொடங்கினர் நேற்று இரவு 12 மணி வரை சுமார் 5000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பால்குடம் அக்னிச்சட்டி பூக்குழி உள்ளிட்ட நேர்த்திக்கடன்களுக்காக காப்பு கட்டினர் . திருவிழா நடைபெறும் காலங்களில் சோழவந்தானில் போக்குவரத்தை ஒருவழிப்பதையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையம் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சோழவந்தான் அரசு போக்குவரத்து கழகம் பல வழித்தடங்களில் பஸ்சை இயக்குவதை காரணம் இல்லாமல் நிறுத்தி விடுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மதுரை அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் தனி கவனம் செலுத்தி, சோழவந்தான் அரசு போக்குவரத்து கழக பஸ்களை உரிய நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *