
மாணவ மாணவியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாடப்புத்தகங்கள் வழங்கினார்.
மதுரை:
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி, மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாடநூல் புத்தகங்களை வழங்கி, கடந்தமுறை பள்ளி விழாவிற்கு வருகை தந்தபோது அதிக அளவில் தேர்ச்சி பெற்றால் ரூ 50 லட்சம் பள்ளி வளர்ச்சிக்கு வழங்குவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 99 சதவீதம் தேர்ச்சி பெற்ற ஒத்தக்கடை மேல்
நிலைப்பள்ளியின் வளர்ச்சி பணிக்கு, கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ 50 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கடிதம் வழங்கினார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா ஆகியோர் உடன் உள்ளனர்.






