
வாடிப்பட்டியில் பாரதிய ஜனதா கட்சியினர் சிந்தூர் மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது.
வாடிப்பட்டி, மே:31.
மதுரை கிழக்கு மாவட்டம், சோழவந் தான் தொகுதி பாரதிய ஜனதா கட்சி சார்பாக சிந்தூர் மூவர்ண கொடி வெற்றி கொண்டாட்டம் பேரணி வாடிப்பட்டி வல்லப கண பதி கோவிலில் தொடங்கி , பழைய தாலூகா ஆபிஸ், குலசேகரன் கோட்டை பிரிவு, போடிநாயக்கன் பட்டி பிரிவு, ராமநாயக்கன்பட்டி பிரிவு, மௌன குருசாமி மடம், பொட்டுலுபட்டி பிரிவு,சந்தை பாலம், பேட்டை புதூர், லாலா பஜார், பஸ்நிலையம், ஜெமினி பூங்கா, யூனியன் ஆபிஸ் பிரிவு, கிருஷ்ணன் கோவில், போலீஸ் நிலையம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், நவநீதபெருமாள் கோவில் வழியாக முக்கிய வீதிகளில் வந்து தாதம்பட்டி நீரேத்தான் இரட்டை விநாயகர் கோவிலை அடைந்தது.

இந்த பேரணிக்கு, மாவட்ட துணைத் தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் அலங்கை பொன்குமார், மாவட்ட நிர்வாகிகள் ஜெயபாண்டி, வழக்கறிஞர் கார்த்திகேயன், ரவிசங்கர் முருகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மண்டல் தலைவர் மாயகிருஷ்ணன் வரவேற்றார். இந்த பேரணியை, தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிவேல்சாமி தொடங்கி வைத்தார். இந்த பேரணியில், முன்னாள் ராணுவ வீரர்கள் அசோக்குமார் பழனிச்சாமி, ராஜாராம், மாவட்ட இளைஞரணி தலைவர் சிவராமன், கட்சி நிர்வாகிகள் சசிகுமார், தர்மர், வெங்கடேசன், வழக்கறிஞர் விஜயகுமார், கதிர்வேல் ,இருளப்பன்,காட்டு ராஜா, முத்துப்பாண்டி அனுசியா, தே.மு.தி.க பேரூர் செயலாளர் பாலாஜி தலைமையில் முன்னாள் பேரூர் செயலாளர்கள் மாரியப்பன் ஜெயராஜ், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் கிருஷ்ணன், வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் வெங்கடசாமி, பேரூர் துணைச் செயலாளர் முருகன் பேரூர் நிர்வாகிகள் சங்கு பாண்டி செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியில், மாணவி பிரதீபா பாரதமாதா வேடம் அணிந்து நடந்து வந்தார் அவருக்கு மலர் தூவிகோஷங்கள் எழுப்பப் பட்டது. முடிவில் ,மண்டல் பொதுச் செயலாளர்
ஜெயபால் நன்றி கூறினார்.