
பிசிபட்டியில் கனிமொழி எம்பி தொடங்கி வைத்த திட்டங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை
உடனடியாக செயல்படுத்த உத்தவிட்ட கனிமொழி எம் பி க்கு தேனி ஒன்றிய பிரதிநிதி மற்றும் பொதுமக்கள் நன்றி.
தேனி அடுத்துள்ள பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களின் ராஜ்ய சபா உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2013 – 2014ன் கீழ் ரு 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட இறகுப்பந்து விளையாட்டு மைதானம் மற்றும் முதியோர் நடை பயிற்சி மேடை, பெண்கள் சுகாதார வளாகம் போன்றவைகள் கடந்த நான்காண்டுகளாக எந்த விதபயன்பாடும் இன்றி பாழடைந்த நிலையில் காணப்பட்டு வந்தது.
இந்நிலையில் பழனிசெட்டிபட்டி பகுதியைச் சார்ந்த திமுக ஒன்றிய பிரதிநிதி கார்த்திகேயன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதன் எதிரொலியாக உடற்பயிற்சி கூடம் ,மற்றும் இறகு பந்து விளையாட்டு மைதானம், சிறுவர் பூங்கா, மகளிர் சுகாதார வளாகம் உள்ளிட்டவற்றை உடனடியாக திறந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிட்டார்.
பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கோரிக்கையை பரிசீலனை செய்து அவற்றை உடனடியாக செயல்படுத்திட உத்தரவிட்ட திராவிட முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அவர்களுக்கும், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும் திமுக ஒன்றிய பிரதிநிதி கார்த்திகேயன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.






