
பாகிஸ்தான் மீது இந்தியா தார்மீக நடவடிக்கை தான் எடுத்துள்ளது போர் அறிவிக்கப்படவில்லை என எச். ராஜா திண்டுக்கல்லில் பேட்டி!
நாகரிகமான மனித குலத்துக்கு எதிரான செயல் பஹல்காம் தாக்குதல் சம்பவம் ஆகும். ஆனால் யுத்தம் என்று யாரும் அறிவிக்கவில்லை. அதற்குள் அனைவரும் போர் வேண்டாம் என்று போர்க்கொடி தூக்குகின்றனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான தார்மீக ரீதியான நடவடிக்கைகள் மேற்கொளளப்பட்டு வருகின்றன. சிந்து நதி lதடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சிந்து நதிநீர் பங்கீட்டில் 80 சதவீதம் பாகிஸ்தானுக்கும், 20 சதவீதம் இந்தியாவிற்கும் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையில் ஒப்பந்தம் செய்து பங்கீடு செய்யப்பட்டது.

80சதவீதம் சிந்து நதி நீரை நேரு கொடுத்தது தவறு. 80 சதவீதத்தை வைத்து விவசாயம், மின்சாரம் உற்பத்தியை செய்து வந்தனர். அதைத்தான் தற்போது மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருமாவளவன், போன்றவர்கள் பேசி வருகின்றனர்.
இவர்களை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும். ஒரு வேளை போர் அறிவிக்கப் பட்டால் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று ச திருமாவளவன் போன்றோர் நினைக்கின்றனர்.
ஆனால் முஸ்லிம்களுக்கு தேசப்பற்று அதிகம். அவர்கள் இந்திய ராணுவ வீரர்களுக்கு
ஆதரவாகவே இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.