May 3, 2025
சோழவந்தான் பேருந்து நிலையத்திற்கு அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல ரவுண்டானா அமைக்க பேரூராட்சி கூட்டத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர் கோரிக்கை

சோழவந்தான் பேருந்து நிலையத்திற்கு அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல ரவுண்டானா அமைக்க பேரூராட்சி கூட்டத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர் கோரிக்கை

சோழவந்தான் மே 1

சோழவந்தான் பேரூராட்சியில் நடைபெற்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் அதிமுக வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் சோழவந்தான் பேரூராட்சி 3வது வார்டு கவுன்சிலருமான கொரியர் கணேசன் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார்.

அதில் மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 18 வார்டுகளை உள்ளடக்கியது. சுமார் 30,000 மக்கள் வசித்து வருகின்றனர். மதுரையைப் போலவே இங்கு பேருந்து நிலையமும் ரயில் நிலையமும் அருகருகே உள்ளது. இந்த நிலையில் பொதுமக்கள் ரயில்வே கேட்டில் அதிக நேரம் நிற்பதை கருத்தில் கொண்டு ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டது. அதிலிருந்து சோழவந்தான் பேருந்து நிலையத்திற்கு முறையாக பேருந்துகள் வருவது கிடையாது.

குறிப்பாக வாடிப்பட்டி நகரி பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வருவது கிடையாது. மிகக் குறுகலான பாதையாக இருப்பதால் பேருந்தை திருப்புவதற்கு போதிய வசதிகள் இல்லை என்று ஓட்டுநர்கள் நடத்துனர்கள் குமுறி வருகிறார்கள். இதனால் பேருந்துகளும் சோழவந்தான் பகுதியில் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன. பேருந்து நிலையத்துக்கு முறையாக பேருந்துகள் வருவது கிடையாது.

இதனை கருத்தில் கொண்டு தபால் நிலையத்திற்கு அருகே ஒரு ரவுண்டானா அமைத்து வாடிப்பட்டி பேருந்துகள் 29 பி நகரி பேருந்துகள் ஆகியவை ரவுண்டானா மூலம் திரும்ப ஏற்பாடு செய்ய வேண்டும் அதற்காக பேரூராட்சி அதிகாரிகள் உடனடியாக ஆலோசனை செய்து நிதி ஒதுக்கி ஆவணம் செய்ய வேண்டும் நெடுஞ்சாலை துறையினரும் இது குறித்து தங்கள் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கையில் தெரிவித்துள்ளார்.

ரவுண்டானா அமைத்து விட்டால் சோழவந்தான் பேருந்து நிலையத்துக்கு சுமார் 70-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்ல ஏதுவான சூழ்நிலை உருவாகும் என்று தெரிய வருகிறது அதனை கருத்தில் கொண்டு உடனே ஆவணம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.