
காரியாபட்டி திருச்சுழி ஸ்பீச் அலுவலகத்தில் குழந்தை உரிமைகள் மீட்டெடுத்தல் திட்ட நிறைவு விழா கொண்டாடப்பட்டது.
காரியாபட்டி:
திருச்சுழி ஸ்பீச் அலுவலகத்தில் குழந்தை உரிமைகள் மீட்டெடுத்தல் திட்ட நிறைவு விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியை, ஸ்பீச் நிறுவன உறுப்பினர் மற்றும் செயலாளர் பொற்கொடி தேவவரம் தலைமை ஏற்று நடத்தினார். இவ்விழாவில், சிறப்பு விருந்தினர்களாக சில்ட்ரன் பிலீவ் நிறுவன அதிகாரிகள் பெலின்டா பென்னட், நான்சி அனபெல், பமீலா, ஜின்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அமுதன், திட்ட இயக்குனர் ஸ்பீச் வரவேற்புரை வழங்கினார். கடந்த 30 வருடங்களாக ஸ்பீச் நிறுவனம் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த உதவியாக இருந்த சில்ட்ரன் பிலீவ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவிக்கும் முறையில் செல்வம், நிதி இயக்குனர் பேசினார்.
இவ்விழாவில் , ஸ்பீச் நிறுவன உறுப்பினர் லூகாஸ் கலந்து கொண்டார். இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற குழந்தைகள், இளைஞர்கள் நிறுவனம் மூலம் பெட்ரா பயன்களை கூறினர்.
இவ்விழாவில், 400 குழந்தைகள், சுமார் 50 கிராம கமிட்டி உறுப்பினர்கள் கலந்து
கொண்டனர். இந்நிகழ்ச்சியை, சுரேஷ் குமார் தொகுத்து வழங்கினார்.
இவ்விழாவின் ஏற்பாடுகளை, பிச்சை மக்கள் தொடர்பு அலுவலர் செய்தார். மாரீஸ்வரி
நன்றியுரை கூறினார்.