
கீழக்கரை நகராட்சி வார்டு எண் 11க்கு உட்பட்ட தச்சர் தெருவில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக கொட்டப்பட்ட செங்கல் ஜல்லி சிமெண்ட் போன்ற கட்டிட கட்டுமான பொருட்கள் நகராட்சி நிர்வாகத்தால் பறிமுதல் செய்யப்பட்டு ரூபாய் 2000 மற்றும் 3000 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் கட்டிடம் கட்டுவதற்கு முன்பே கட்டிட வரைபட அனுமதி பெறும் போதே பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாது கட்டிட பொருட்கள் வைப்பதற்கு உரிய அனுமதி பெற வேண்டும்.
மீறுவோர் மீது திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016ன் பகீழ் ரூபாய் 2000/- முதல் 5000/- வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது…