
மோட்ச்ச தீபம் ஏற்றி தீவிரவாதத்திற்கு எதிராக உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது.
ஏப்ரல் 23 காஷ்மீர் பகுதியில் உள்ள புஹல்காமில் பகுதிக்கு சுற்றுலா சென்ற அப்பாவி பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்திய கொடும் பாதக செயலை கண்டித்தும் உயிரிழந்த 26 பேரின் ஆன்மா சாந்தியடையவும் திண்டுக்கல் மாவட்ட கிழக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக காமராஜர் பேருந்து நிலையத்தில் பாரதியஜனதா
கிழக்குமாவட்டத் தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டு தீவிரவாதத்திற்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பி உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினார்..
இதில் மாவட்ட துணை தலைவர் சந்திரசேகர் மாவட்ட செயலாளர் முத்துக்குமார்
மண்டல் தலைவர் ராம் கண்ணன் முன்னிலை வகித்தனார் மண்டல் தலைவர்களும் தொண்டர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.