
திருமங்கலம் தெரு நாய்கள் அதிகம்கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை நகராட்சி கூட்டத்தில் விவாதம்.
மதுரை,
திருமங்கலம் நகராட்சியில்,
நகர்மன்ற குழு கூட்டம் நடைபெற்றது.
நகர்மன்ற குழுத் தலைவர் ரம்யா முத்துக்குமார் தலைமை வகித்தார்.
துணைத் தலைவர் ஆதவன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் அசோக்குமார், பொறியாளர் ரத்தினவேலு உள்ளிட்ட நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
திருமங்கலம் நகராட்சி இரண்டாவது வார்டு பகுதியில் தெரு விளக்கு எரியவில்லை என ,தெரிவிக்கப்பட்டது.
தெருருவிளக்கு அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் நகராட்சி ஆணையர் தெரிவித்தார். திருமங்கலம் போக்குவரத்து பணிமனைக்கு எதிராக சாலைகள் சரியில்லாமல் உள்ளது.
இதனை சரி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடப்பட்டது.
கவுன்சிலர் சின்னச்சாமி, திருமங்கலம் நகராட்சியில் குறை கூறி மனு கொடுத்தால் அதற்கு இதுவரை நடவடிக்கை எடுத்துள்ளீர்களா இதுவரை எடுத்தது போல் தெரியவில்லை.
பொதுவாக அப்ரூவல் வாங்கிய அளவிற்கு கட்டாமல் கூடுதலாக கட்டியுள்ளார்கள் அதற்கு நடவடிக்கை எடுத்துள்ளீர்களா என கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து துணைத் தலைவர் ஆதவன், தெரு நாய்களை ஒரு வாரத்துக்குள் பிடிக்க தீர்மானம்நிறைவேற்ற வேண்டும்.
மக்கள் தொகையை விட நாய்கள் அதிகம் உள்ளதாக திருமங்கலம் நகராட்சி கூட்டத்தில் விவாதம் செய்யப்பட்டது.தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாய்களுக்கு ஊசி போடுவது பராமரிப்பு உள்ளிட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அதை பயன்படுத்தி நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, பொறியாளர் ரத்தினவேலு தெரிவித்தார். நாலாவது வார்டில் தண்ணீர் லீக்கேஜ் ஆகிறது தடுப்பதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என, ஜஸ்டின் திரவியம் கூறினார்.
அசோக் நகர் பூங்காவில்,
மின்சார விளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் பயன்படுத்தி வரும் நிலை உள்ளது தடுப்பதற்கு மின் விளக்கு வசதிகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அங்கு லைட்போடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் அசோக் குமார் கூறினார்.
குண்டாறு தூர்வார வேண்டும் தூர்வாரி பல வருடம் ஆகிவிட்டது புதர் மண்டி உள்ளது தூர்வார வேண்டும் என, கவுன்சிலர் வீரக்குமார் கோரிக்கை விடுத்தார்.ரயில்வே பாலத்தில் இருந்து விமான நிலையம் செல்லும் சாலை சரியில்லாமல் உனது இதனை சரி செய்ய வேண்டும் என, கவுன்சிலர் ராஜகுரு தெரிவித்தார்.
தேவையான குறைகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் நகராட்சி ஆணையர் அசோக் குமார் தெரிவித்தார்.






