
ஆயக்குடியில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சுபிக்ஷா நிர்வாகம் சார்பாக இலவச மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடியில் சுபிக்ஷா திருமண மண்டபத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சுபிக்ஷா நிர்வாகம் மற்றும் எக்ஸ்சல் காப்பியர் சிஸ்டம் நிர்வாகம் மற்றும் பெரியார் மருந்தியல் கல்லூரிமற்றும் ஹர்ஷமித்ரா மருத்துவமனை நிர்வாகம் ஆகியவை இணைந்து இலவச புற்றுநோய் பரிசோதனை முகாம் நிகழ்ச்சி நடைபெற்றன.
இந்நிகழ்வில் எக்ஸெல் காப்பியர் சிஸ்டம் நிறுவனர் பிச்சைமுத்து சுபிக்ஷா நிர்வாகம் சமா பிச்சைமுத்து வரவேற்புரையாக கவுன்சிலர் சரஸ்வதி வாஞ்சிநாதன், சின்னத்துரை, பொற்செழியன், மற்றும் சிறப்பு கருத்துரையாக ஹர்ஷமித்திரா மருத்துவமனை சிவா அருணாச்சலம் பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் செந்தாமரை மற்றும் அமரபூண்டி சின்ராஜ், மரத்தடி மையம் ராமமூர்த்தி, சிறப்பு மருத்துவர்கள் புற்றுநோய் மருத்துவர். சௌமியா, மருத்துவர் மாணுஸ்ரீ மற்றும் இந்நிகழ்வில் மனோகரன், மாரிமுத்து, கிப்டான், பாலன், ஆறுமுகம், பொன்ராஜ், ஜான்சிராணி, பத்மநாபன், தர்மராஜ், டைகர்வேலு, ராகுல், பிரகாஷ், மாயவன், ஹன்சிராம், சுப்பிரமணி, உள்ளிட்டோர் கலந்து கொண்டு மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடைபெற்றன.
மேலும் இந்நிகழ்வில் பொதுமக்களுக்கு இலவசமாக சக்கரை அளவு பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனை, மார்பக புற்றுநோய் பரிசோதனை, கர்ப்ப வாய் புற்றுநோய் பரிசோதனை, குடல் புண் பரிசோதனை, மற்றும் பொது மருத்துவம் உள்ளிட்டவைகள் நடைபெற்றன. தொடர்ந்து பெரியார் மருந்தியல் கல்லூரி சார்பாக அனைவருக்கும் இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு மருத்துவ பரிசோதனை முகாம் நிகழ்ச்சி நடைபெற்றன..
பழனி நிருபர் : நா.ராஜாமணி.