
பசியால் வாடும் மக்களுக்கு தொடர் அன்னதானம் வழங்கி வரும் தென்னிலை கதிர் மற்றும் ஊடக உரிமைக் குரல் சங்கம்...!
இயன்றதை செய்வேன் எனது (தமிழன் வடிவேல்) உயிர் உள்ளவரை…!
பசியால் வாடும் மக்களுக்கு தொடர் அன்னதானம் வழங்கி வரும் தென்னிலை கதிர் மற்றும் ஊடக உரிமைக் குரல் சங்கம்…!

11.4.2025 அன்று சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கத்தில் உள்ள தென்னிலை கதிர் மாதம் இரு முறை இதழ் மற்றும் ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மாபெரும் அளவில் அன்னதான நிகழ்வு நடைபெற்றது.
இந்த அன்னதான நிகழ்வின் தொடக்கமாக மூத்த ஊடகவியலாளரும்,தொலைக்காட்சிகளில் பல்வேறு விதமான விவாத மேடைகளில் கலந்துகொண்டு அனைத்து அரசியல் சூழ்நிலைகளை எடுத்துப் பேசி வரும் அரசியல் விமர்சனருமான என் அன்பு தோழர் வி. இராமன் அவர்கள் அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இந்த மாபெரும் அன்னதான நிகழ்வை தென்னிலை கதிர் பத்திரிகை ஆசிரியரும் ஊடக உரிமைக்குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர்/பொதுச் செயலாளருமான வி. எம். தமிழன் வடிவேல் அவர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பான முறையில் செய்து அன்னதானத்தை வழிநடத்தினர்.
இந்த அன்னதான நிகழ்வில் தென்னிலை கதிர் உதவி ஆசிரியர் வீ.சித்ரா குமரேசன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.ரவீந்திரன்,A. C.விநாயகராஜன்,சென்னை நிருபர்கள் நாகேந்திரன்,சங்கர்,விஜயகுமார் ஆகியோர் உடன் இருந்து உதவிகளை செய்தனர்.
தொடர்ந்து அன்னதானம் வழங்கி வரும் தென்னிலை கதிர் பத்திரிகை ஆசிரியர் தமிழன் வடிவேல் அவர்களுக்கு அப்பகுதியில் உள்ள மக்கள் நன்றிகளை தெரிவித்ததோடு தொடர்ந்து இந்த பணியை செய்ய பலரும் கோரிக்கௌயும்,வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.