
விவசாயிகளுக்கு தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் அங்கக வேளாண்மை குறித்து விழிப்புணர்வு
பெரியகுளம் ஏப்.10
பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி தோட்டக்கலை அலுவலர் சரவணன் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் ரெங்கராஜன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கிராம தங்கள் திட்டத்தின் கீழ் ஆர்.வி.எஸ் பத்மாவதி தோட்டக்கலை கல்லூரி நான்காம் ஆண்டு மாணவிகள் இளமதி, ஜெனிபா, ஜெய்ஸ்ரீ, ஜோஸ்பின் ஜெசிந்தா, கிருபா, கிருபாவதி ஆகியோர் கலந்து கொண்டு அங்கக வேளாண்மை மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரைகள் வழங்கினர்.