
தமிழக ஜனதாதளம் (TJD) சார்பில் இரங்கல் செய்தி தெரிவித்தார் ராஜகோபால்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், இலக்கிய செல்வர் திரு.குமரி அனந்தன் அவர்களின் மறைவுக்கு தமிழக ஜனதாதளம் (TJD) சார்பில் ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். திரு.குமரி அனந்தன் அவர்கள் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவரை பின்தொடர்ந்து முதன் முதலில் இளைஞர் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று பிறகு பெருந்தலைவர் காமராசர் அவர்களின் தலைமையில் இயங்கிய ஸ்தாபன காங்கிரசில் பொதுச் செயலாளராக பணியாற்றியவர். 1977ல் ஜனதா கட்சியின் வேட்பாளராக நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். மனித புனிதர் மொரார்ஜி தேசாய் அவர்களின் ஆட்சியின் போது அவரிடத்தில் நெருங்கி பழகி தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை பெற்று தந்தவர். மேலும் பாராளுமன்றத்தில் தமிழ் குரல் ஒலிக்க பாடுபட்டவர். ஜனதா கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிவயர். 4 முறை சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணியை செய்தவர். தமிழ் இலக்கியத்தில் ஆளுமையாக இருந்தவர். ஒரு நேர்மையான மிகச்சிறந்த அரசியல் தலைவரை தமிழகம் இழந்திருக்கிறது. அவர் மறைவால் வாடும் அவரது மகள் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அவர் குடும்பத்தார்க்கும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கும் தமிழக ஜனதாதளம் (TJD) சார்பாக ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.