
பெரியகுளத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தேனி மின் பகிர்மான வட்டம் பெரியகுளம் கோட்டம் சார்பில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் பெரியகுளம் மின்சார வாரிய நகர் பிரிவு அலுவலகத்தில் கோட்ட செயற்பொறியாளர் பால பூமி தலைமையில் நடைபெற்றது.
இம் முகாமில் மின் நுகர்வோர், மின் கட்டண குறைகள் மின் மீட்டர் குறைபாடு, குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றுதல் உள்ளிட்ட புகார்களை மனுக்களாக வழங்கினர். இந்த புகார் மனுக்களை பெற்றுக் கொண்ட மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக பொதுமக்களிடம் தெரிவித்தனர்.
பெரியகுளம் (மேற்கு) உதவி செயற்பொறியாளர் முத்துராமலிங்கம், பெரியகுளம் (கிழக்கு) உதவி செயற்பொறியாளர் பார்த்தசாரதி, ஆண்டிப்பட்டி (மேற்கு) உதவி செயற்பொறியாளர் முருகன், உதவி செயற்பொறியாளர் கிழக்கு ஆண்டிபட்டி ஜெயசந்திரன், உதவி செயற்பொறியாளர் ஜிஐஎஸ் தேனி ஆனந்தன் மற்றும் பெரியகுளம் கோட்ட பொறியாளர்கள் காமுரத்தினம், செந்தில்குமார், தீபா, சுரேஷ் கண்ணன், ரமேஷ், சந்திரகுமார், கிஷோர், சேகரன், சத்திய பிரகாஷ், மகேஷ், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மின்நுகர் வோர்களிடம் இருந்து 50 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை மின்வாரிய அதிகாரிகள் செய்திருந்தனர்.