April 19, 2025
அய்யூர் கிராமத்தில் பங்குனி திருவிழா

அய்யூர் கிராமத்தில் பங்குனி திருவிழா

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், அரியூர் கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ மண்டு கருப்பணசாமி ஸ்ரீ கரந்தமலை ஸ்ரீ செல்லாயி அம்மன் ஸ்ரீ அய்யனார் ஸ்ரீ சப்த கன்னிமார்கள் அரபு மஸ்தான் ஆகிய காவல் தெய்வங்களுக்கு பங்குனி மாத உற்சவ விழா நடைபெற்றது. இந்த விழாவில், அய்யனார் சுவாமிக்கு பொங்கல் வைத்து கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மூன்று நாள் திருவிழாக்களில் வேண்டுதல் நிறைவேறும் வண்ணம் பக்தர்கள் முளைப்பாரி ஊர்வலம் மும் நடைபெற்றது. முன்னதாக, கிடாய் வெட்டுதல், நிகழ்ச்சி பொங்கல் வைத்தல் அதனைத் தொடர்ந்து, இரவு வள்ளி திருமண நாடகம் மட்டும் பாட்டு கச்சேரி நடைபெற்றது. அய்யனார், குதிரை எடுத்து ஊர்வலம் சென்று பூஞ்சோலை சென்றன. அதனைத் தொடர்ந்து, சுவாமி இருப்பிடம் சென்றது. இதற்கான ஏற்பாடுகளை, அய்யூர்கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.