
பழனியில் தவெக சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி இரயில்வே சாலையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு முன்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவானது இஸ்லாமியர்களுக்கு எதிரானது, இஸ்லாமியர்கள் இச்சட்டத்தினால் வெகுவாக பாதிக்கப்படுவார்கள் என்பதை வலியுறுத்தியும், உடனடியாக வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கார்த்திக் ராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் விஜய் சிவா, மாவட்ட செயற்குழு பாலமுருகன் நகர செயலாளர் மிதுன் ஆகியோருடன் ஒட்டன்சத்திரம் , தொப்பம்பட்டி , கொடைக்கானல் நகர செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் , ஒன்றிய அரசு தொடர்ந்து பொதுமக்களின் மீது விரோத போக்கை கடைபிடித்து வரும் நிலையில் மக்களின் நலனுக்காக பாடுபட வேண்டும் மக்களுக்கு எதிரான சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தவெகவினர் வலியுறுத்தினர்.
பழனி நிருபர் நா.ராஜாமணி