
உலக தண்ணீர் தினம்: சிவசைலம் கிராமத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தென்காசி. கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிவசைலம் கிராமத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு இன்று (29.03.2025) கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சிமன்ற தலைவர் திருமதி மலர்மதி தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்வின் ஒரு பகுதியாக, தென்காசி மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழ்நாடு அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்திடும் வகையில் சிறப்பு புகைப்படக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த கண்காட்சியை தென்காசி மாவட்ட ஆட்சியர் திரு.ஏ.கே. கமல்கிஷோர் திறந்து வைத்தார். பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்காட்சியை பார்வையிட்டு, நீரின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பெற்றனர்.
நிகழ்வில் அரசு அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு கிராம மக்கள் கலந்துகொண்டு நீர்ப்பாசனம், குடிநீர் பாதுகாப்பு மற்றும் நீர்த்தொகை மேலாண்மை குறித்து ஆலோசனை பெற்றனர்.