
பழனியில் 120 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டம் அடிக்கல் நாட்டு விழா
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சியில் TNUDF Under KFW assisted SMIF – TN – III திட்டத்தின் கீழ் 120 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டம் செயல்படுத்த பழனி நகராட்சி அலுவலகம் முன்பு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பழனி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஐ பி செந்தில்குமார் பணியை தொடங்கி வைத்தார்.
விழாவில் பழனி கோட்டாட்சியர்,பழனி நகர மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, துணை தலைவர் கந்தசாமி, பழனி நகராட்சி ஆணையர் சத்தியநாதன், நகராட்சி பொறியாளர் ராஜவேல், பழனி நகர் நல அலுவலர் மனோஜ் குமார், பழனி நகர திமுக கழக செயலாளர் வேலுமணி, நகர் மன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், துறை சார்ந்த அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டினை பழனி நகராட்சி நிர்வாகம் செய்திருந்தது.