
பெரியகுளத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெற்று கட்டுமான பணிகளை பார்வையிட்டு கோட்ட பொறியாளர் ஆய்வு
தேனி மாவட்டம் பெரியகுளம் விக்டோரியா நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் திட்டத்தின் கீழ் வடிகால் மற்றும் புதிய பாலம் கட்டுமான பணிகள் ஜிபிஎம் கன்ஸ்ட்ரக்சன் மூலம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பாலம் கட்டுமான பணிகளை நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் கிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய் வின் போது நெடுஞ்சாலைதுறை உதவி பொறியாளர், தரக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் உடனிருந்தனர்.